காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கெஜ்ரிவால் மீது "ஷூ" வீச்சு: டெல்லியில் பரபரப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது "ஷூ" வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது "ஷூ" வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் 15 நாட்கள் கார் போக்குவரத்தில் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.
 
அதன்படி வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண்களில் முடியும் கார்களையும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவு எண்களில் முடியும் கார்களையும் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.
 
ஞாயிற்றுக் கிழமை மட்டும் அனைத்து கார்களையும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதே போன்று இயற்கை வாயுவில் (சி.என்.ஜி) இயங்கும் கார்கள் சாலையில் அனைத்து நாட்களும் ஓட அனுமதி அளிக்கப்பட்டது.
 
இந்நிலையிலி, இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
 
அப்போது ஒருவர் எழுந்து "அரவிந்த் ஜி ஒரு நிமிடம் நான் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள் என்று கூறியபடி தொடர்ந்து பேசினார் "சி.என்.ஜி. ஸ்டிக்கர் ஊழல் தொடர்பாக நான் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தினேன்.
 
அதில் ஒரு சி.என்.ஜி. ஸ்டிக்கர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவது அம்பலமானது. நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள்? இதற்கு எதிராக நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேட்டார்.
 
இதைத் தொடர்ந்து, அவர் கெஜ்ரிவால் மீது ஒரு சி.டி.யையும்  ஒரு "ஷூ" வையும் வீசினார். ஆனால் அவை கெஜ்ரிவால் மீது விழாமல் பக்கத்தில் விழுந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில், ஷூ வீசிய நபரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் வேத பிரகாஷ் என்பதும், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஆம் ஆத்மி சேனாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கெஜ்ரிவால், "ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் கார் ஓட்டுவதில் கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
 
சீருடையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்கிற வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்" என்று கெஜ்ரிவால் அப்போது கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top