காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஏழை குழந்தைகள் இலவசமாக கல்வி கற்பதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருகிறார். நடிகர் லாரன்ஸ் ஏழை குழந்தைகளுக்கு இலவச...
ஏழை குழந்தைகள் இலவசமாக கல்வி கற்பதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருகிறார்.

நடிகர் லாரன்ஸ் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டும் முடிவை எடுத்து, தற்போது அதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு பிரிகேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்து இருக்கிறார். இன்னும் வசதி வரும்போது பள்ளியை பிளஸ்2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியை கட்டும் பணி நேற்று தொடங்கியது.
இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில்,

"ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது. பீஸ் கட்டுகிற பணத்தில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது. எனவே இந்த பள்ளியை கட்டுகிறேன். நான் தான் சரியாக படிக்கல, படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top