vkrnajur vkrnajur Author
Title: பெரம்பலூர் அருகே வீட்டிற்குள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிய பெண் கொலையா?போலீசார் விசாரணை !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூரை சேர்ந்தவர் சந்தானம். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உ...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூரை சேர்ந்தவர் சந்தானம். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தானம் இரவில் வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கலைச்செல்வி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து சந்தானம் மங்களமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் சம்பவ இடத்திற்கு வந்து கலைச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு கலைச்செல்வி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top