காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: விஜய் மல்லையாவின் மொத்த சொத்து மதிப்பை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மொத்த சொத்துக்கள் எவ்வளவு என்பதை தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 21ம் தேதிக்குள் இந்...
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மொத்த சொத்துக்கள் எவ்வளவு என்பதை தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 21ம் தேதிக்குள் இந்த தகவலை அளிக்குமாறும் மல்லையாவிற்கு, உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

வங்கிகளிடம் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத நிலையில் தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் தங்கியுள்ளார். அவர் மீது வங்கி கூட்டமைப்புகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே முதல் தவணையாக வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 4000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதாக, விஜய் மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கி கூட்டமைப்புகள் நிராகரித்து விட்டன. உச்ச நீதிமன்றத்தில் இன்று, நீதிபதிகள் குரியன் ஜோசப்,  நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, விஜய் மல்லையா உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

விஜய் மல்லையா எப்போது நாடு திரும்புவார் என, அவரின் வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விஜய் மல்லையாவின் உண்மைத்தன்மையை நிருபிக்க, அவர் குறிப்பிட்ட ஒரு தொகையை உச்ச நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றும் கூறினர். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top