vkrnajur vkrnajur Author
Title: இணையத்தில் உலாவரும் கத்தார் அரசு குடும்பத்தின் முக்கிய நிதி விவரங்கள்!! பார்த்தால்வியந்திடுவீர்கள்.!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கத்தார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின் வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய விவரங்கள் இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதா...
கத்தார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின் வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய விவரங்கள் இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டமையை அல் ஜெசீரா உறுதிப்படுத்தியுள்ளதுடன், வெளியிடப்பட்ட இந்த தரவுகள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கத்தாரின்  தேசிய வங்கியின் பாதுகாப்பு பிரிவிடம் இருந்து இணையம் மூலமாக இந்த தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தரவுப் பட்டியலில் குறித்த வங்கியின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகளும் காணப்படுவதாவும் குறிப்பிடப்படுகின்றது.

 கத்தார் தேசிய வங்கியின் உள்ளக ஆவணங்கள், கோப்புக்கள் மற்றும் முக்கிய நிதித் தகவல்கள் என்பவை உள்ளடங்கலாக, 1.5 ஜிகாபைட்ஸ் தரவுகள் இணைய ஊடுருவிகளால் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தம் வங்கித் தகவல்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளமையை  கத்தார் தேசிய வங்கியும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top