காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அதிமுக வில் இருந்து விலகி திமுக வுடன் இணைந்த மேலும் ஒரு இஸ்லாமிய கட்சி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய தேசிய லீக் தற்போது சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று திம...
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய தேசிய லீக் தற்போது சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய தலைவர் முகமது சுலைமான் தமது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தேசிய லீக் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் அண்மையில் அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இந்திய தேசிய லீக் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த இந்திய தேசிய லீக் கட்சி, அதிமுக அணியில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமான், மாநிலத் தலைவர் பஷீர் அகமத் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை இந்திய தேசிய லீக் கட்சி ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தற்போது இந்திய தேசிய லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top