vkrnajur vkrnajur Author
Title: தேமுதிக,மந௨ மற்றும் தமாகா ௬ட்டணி விபரம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது. வரும் மே 16ம் தேதி நடைபெற உள்ள ...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது.

வரும் மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பல முனை போட்டி உருவாகியிருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு போட்டியாக உருவாகியுள்ள மக்கள நல கூட்டணி உடன் தேமுதிக உடன்பாடு ஏற்பட்டு களம் காண உள்ளது. இவர்களோடு தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி அமைத்துள்ளார்.

இதற்காக, ஜி.கே.வாசன், மக்கள் நலகூட்டணி தலைவர்கள் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து கூட்டணி அமைப்பதற்காக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, 26 தொகுதிகள் தமாகா-க்கு ஒதுக்குவது என உடன்பாடாகியுள்ளது.

அதன்படி, தேமுதிக 104, மதிமுக 29, தமாகா 26, சிபிஎம் 25, சிபிஐ 25, விசிக 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இணைந்த மக்கள் நல கூட்டணி தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தின.

இந்நிலையில்,  மார்ச் 23ம் தேதி தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி உடன் ஒப்பந்தம் செய்து தொகுதி பங்கீடு ஏற்பட்டது. அதேசமயம், மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். 

இதனால் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்த்த பாஜக பெரிதும் ஏமாற்றத்தை சந்தித்தது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இணைய தமாகா பெரிது எதிர்பார்த்திருந்தது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஏமாற்றத்தில் இருந்த ஜி.கே.வாசனை மக்கள் நல கூட்டணி தலைவர்களும், பாஜகவினரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

பிரதான கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து பிரசாரத்தை தொடங்கி இருக்கும் இந்த சூழலில் மநகூ - தேமுதிக உடன் தமாகா இணைந்திருக்கிறது. இதனால், அந்த கூட்டணி தலைவர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top