காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
  இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க  முடியுமா ? டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவ...
 
இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க  முடியுமா ?
டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார்
தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில்
நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் … காமராஜர் மட்டும் சற்றே
ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் .
அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர்
சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று . அப்பொழுது நேரு சொன்னார் ; “காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும், இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது” , என்றார்....
பிறகு, காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top