vkrnajur vkrnajur Author
Title: பெரம்பலூர் அருகே லாரி மோதிய வாலிபர் சாவு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் செழியன் மகன் ஸ்டாலின் ( வயது 29). விவசாயி. இவர் கடந்த ஏப்.1 ந் தேதி அரும்ப...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் செழியன் மகன் ஸ்டாலின் ( வயது 29). விவசாயி. இவர் கடந்த ஏப்.1 ந் தேதி அரும்பாவூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

தொண்டைமாந்துறை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அரும்பாவூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சையின் போது ஸ்டாலின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுருளிவேல் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஸ்டாலினுக்கு சுகன்யா (25) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top