vkrnajur vkrnajur Author
Title: திமுக தேர்தல் அறிக்கை : மதுவிலக்கு, விவசாயக்கடன்,கல்வி கடன் ரத்து !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திமுக தேர்தலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இதில், விவசாயிகள் மற்றும் கல்வி கடன் ரத்து செய்யப்படும...
திமுக தேர்தலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இதில், விவசாயிகள் மற்றும் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றும், மது விலக்குக்கு தனி சட்டம் இயற்றப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் கலைக்கப்படும், மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு மருத்துவ உதவி அளிக்கப்படும், டாஸ்மார்க் ஊழியர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யப்படும் என  தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

●  மது விலக்கை அமல்படுத்த  தனிச்சட்டம் 
●  டாஸ்மாக் நிறுவனம்  கலைக்கப்படும்
● விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்
● சிறு, குறு விவசாய கடன் ரத்து
● நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வகம்
● ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை
● ஏழை எளியோருக்கு “அண்ணா உணவகம்”
● மீனவ சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்
●  காஞ்சிபுரத்தில் நெசவு பூங்கா
● கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
● நீர் பாசனத்திற்கு தனி அமைச்சகம்
●  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம்
●  மாணவர்களின் கல்வி கடன் ரத்து
●  மாணவர்களுக்கு இணைய வசதி
● மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக்கப்படும்
● ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
● மீண்டும் வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்படும்
● பத்திரிகையாளர் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் பெறப்படும்
● பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்
● வசதியற்றவர்களுக்கு கைபேசி இலவசமாக வழங்கப்படும்
● எம்ஜிஆர் திரைப்பட நகரம் புனரமைக்கப்படும்
● தொழில்முனைவோருக்கு 100 நாளில் அனுமதி
● முதியோருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top