Mohammed Farook Mohammed Farook Author
Title: இதற்குதான் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் - சீமான் விளக்கம்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
மது, ஊழலை ஒழிப்பதற்காகத்தான் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளா...
மது, ஊழலை ஒழிப்பதற்காகத்தான் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 
நாகர்கோவிலில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், மதுவை ஒழிப்போம் என்று கூறும் இரு கட்சிகளும் முதலில் தங்களின் கட்சிகளில் உள்ள உறுப்பினர்களின் மது ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்கிறார்கள்.
 
ஆட்சியில் இருக்கும்போது ஏன் ஒழிக்கவில்லை. படிப்படியாக மூடுவோம் என்கிறார் ஜெயலலிதா, இதே குமரியில் சசிப்பெருமாள் ஒரு கடையைத்தான் மூடச் சொன்னார். அந்தக் கடையே இன்னும் மூடவில்லை. படிப்படியாக குறைக்கக் கூடிய ஒரு அறிகுறியைக் கூட கடந்த 5 ஆண்டுகளில் காட்டவில்லை.
 
அத்தனை போராட்டங்களுக்கும் பதில் சொல்லாமல், மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இப்போது தேர்தல் வந்தவுடன் படிப்படியாக குறைக்கிறோம் என்கிறார் ஜெயலலிதா. இது தேர்தலுக்கான வெற்று வாக்குறுதியாகத்தான் பார்க்க முடிகிறது.
 
மது, ஊழலை ஒழிப்பதற்காகத்தான் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top