காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: தொகுதி மாற்றம்! முதல்வருக்கு மஜக நன்றி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஒட்டன்...
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தொகுதியை மாற்றி அதற்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் அம்மா அவர்களுக்கு மஜக சார்பில் கடிதம் கொடுத்து இருந்தோம்.

எங்களின் வேண்டுகோளை அன்புடன் பரிசீலித்த முதல்வர் அவர்கள், இன்று எங்களின் விருப்பப்படி ஒட்டன்சத்திரத்திற்கு பதிலாக வேலூர் தொகுதியை மனிதநேய ஜனநாய கட்சிக்கு வழங்கி இருக்கிறார்கள்.

புதிதாக உருவான மனிதநேய ஜனநாய கட்சியின் மீது தொடர்ந்து அன்பு காட்டிய, எமது ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஏற்கனவே செயற்குழுவில் எடுத்த முடிவின் படி,ஒட்டன்சத்திரத்திம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரசித் அவர்கள் வேலூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார்.

இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top