காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூருவுக்கு மாற்றம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மகாராஷ்டிராவில் ஐபிஎல் போட்டி நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ஐபிஎல் போட்டிகளின் நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்...
மகாராஷ்டிராவில் ஐபிஎல் போட்டி நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ஐபிஎல் போட்டிகளின் நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, புனே மற்றும் மும்பையில் நடைபெறுவதாக இருந்த நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டி பெங்களூருவுக்கும், கொல்கத்தாவிற்கும் மாற்றப்பட்டுள்ளன.


மே 24 ம் தேதி நாக் அவுட் சுற்றின் முதல் போட்டி திட்டமிட்டபடி, பெங்களூருவில் நடக்கிறது.

இதையடுத்து, 25ம் தேதி புனேவில் நடப்பதாக இருந்த எலிமினேட்டர் போட்டி, கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று, 27ம் தேதி நடக்கும் மற்றொரு நாக் அவுட் போட்டியும் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

மே 29 ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டி மும்பையில் இருந்து, பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பிசிசிஐ தெரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top