vkrnajur vkrnajur Author
Title: வாட்ஸ் அப்பில் தகவல் திருட்டை தடுக்க முழுமையான பாதுகாப்பு வசதி அறிமுகம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தகவல் திருட்டை தடுக்கும் வகையில், முழுமையான பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...
வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தகவல் திருட்டை தடுக்கும் வகையில், முழுமையான பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ் அப் முக்கிய இடம் வகிக்கிறது. வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது, ஹேக்கர்கள் எனும் இணைய திருடர்கள் இடையில் குறுக்கிட்டு தகவல்களை முழுவதுமாக பெற வாய்ப்புகள் உள்ளன. 

இந்நிலையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டில், தகவல் பரிமாற்றத்தின் போது, தகவல் திருட்டை தடுக்கும் வகையில் முழு பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் தெளிவில்லாத எழுத்துகளாக இணையம் மூலம் பரிமாறப்படும். அதற்கு உரிய ரகசிய எழுத்துகளை பயன்படுத்தாமல் தகவல்களை அறிந்து கொள்ள முடியாது. இந்த ரகசிய எழுத்துகள், தகவல்களை அனுப்பும் மற்றும் பெறும் நபரின் வாட்ஸ் அப்பில் மட்டுமே இடம்பெற்றிருக்கும். 

இதன்மூலம் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், அழைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள், வாய்ஸ் மெசேஜ்கள் அனைத்தும் முழுவதுமாக பாதுகாக்கப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் எண்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படும். 

தகவல் பரிமாற்றத்தின் போது இடையில் யாரேனும் தகவல்களை திருடினால், அதன் உண்மை தகவல்களை அறிந்து கொள்ள முடியாது. இந்த வசதி அனைத்து வகையான ஓ.எஸ் பயன்படுத்தும் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top