Mohamed Farook Mohamed Farook Author
Title: சவுதி அரேபியாவில் தவிக்கும் மீனவர்களை தாயகம் கொண்டுவர பிரதமருக்கு முதல்வர் கடிதம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் தவிக்கும் 63 மீனவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறு...
சவுதி அரேபியாவில் தவிக்கும் 63 மீனவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், சவுதி அரேபியாவுக்கு 2013ம் ஆண்டு சென்ற 62 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு கேரள மீனவர், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர்களுக்கான ஊதியத்தை அந்த நிறுவனம் முறையாக வழங்காத காரணத்தால், தங்களின் குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப முடியாமல் தமிழக மீனவர்கள் தவித்து வருவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும், சவுதியில் இருந்து இந்தியா திரும்ப முடியாத நிலையும், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழக மீனவர்களை தாயகம் அழைத்து வர தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top