Mohamed Farook Mohamed Farook Author
Title: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி போர்க்கொடி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அரவக்குறிச்சி தொகுதியில் திட்டமிட்டபடி போட்டியிடப்போவதாக காங்கிரஸ் முன்னாள் வேட்பாளர் ஜோதிமணி அறிவித்துள்ளார். தமிழக சட்ட மன்றத்...
அரவக்குறிச்சி தொகுதியில் திட்டமிட்டபடி போட்டியிடப்போவதாக காங்கிரஸ் முன்னாள் வேட்பாளர் ஜோதிமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. 
 
காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் போாட்டியிடும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வந்தார். ஆனால், அவருக்கு அந்த தொகுதி மறுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் திட்டமிட்டபடி போட்டியிடப்போவதாக காங்கிரஸ் முன்னாள் வேட்பாளர் ஜோதிமணி அறிவித்துள்ளார்.
 
இது குறித்து, ஜோதிமணி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த சில மணி நேரத்தில் நேரிலும், முகநூல்,வாட்ஸ் அப்,குறுஞ்செய்தி என்று ஆதரவு குவிந்துவருகிறது. ஓயாது ஒலிக்கின்ற அலைபேசியில் ஆதரவோடு தாமாகவே முன்வந்து தேர்தல் பணியில் களமிறங்கவும், நிதியுதவி அளிக்கவும் முன்வருகிறார்கள்.
 
சற்று முன் நான் காவடியில் சந்தித்த நூற்றுக்கணக்கான அரவக்குறிச்சி மக்கள் "நீ தைரியமா இரு நாங்க் இருக்கோம்" என்று உறுதியாக சொன்னார்கள். ஊடகங்களுக்கு நான் அளித்த பேட்டியின் போது உடனிருந்தவர்கள் குறிப்பாக காவடிக்கு வந்த பெண்கள் வந்து கைகளைப் பற்றிக்கொண்டு" எங்க ஊருக்கு வரும்போது சொல்லுங்க நாங்க ஓட்டுக்கேட்க கூட வாரோம் " என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டுப் போனார்கள்.
 
கூட்டத்தில் காத்திருந்து "எங்க வூட்ல உங்க காலண்டர ஆசையா மாட்டி வெச்சிருக்கோம். அதா வந்து பேசிட்டு போகலாம்னு வந்தோம். எங்க ஓட்டு உங்களுக்குத்தே " என வந்து சிரிப்போடு சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
 
குழந்தைகளை அழைத்து "இவுங்கதே ஜோதிமணி அக்கா" என்று பெற்றோர் அன்போடு அறிமுகப்படுத்துகிறார்கள். குழந்தைகள் வெட்கத்தோடு புன்னகை செய்கிறார்கள். எங்களது எளிய பிரச்சாரம் இவ்வளவு தூரம் அனைவரையும் ஈர்த்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 
 
இந்த அன்பை, நம்பிக்கையை , ஆதரவை வெறும் நன்றி என்ற ஒருவார்த்தையில் கடந்து போய்விடமுடியாது. உங்கள் நம்பிக்கையை கடைசிவரை காப்பாற்றுவேன். அரவக்குறிச்சி 2016‬ நமக்கான போர்க்களம்.வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிடம் சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி தோல்வியை தழுவியவர் என்பது குறிப்பிடதக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top