காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: செருப்பைவிட சிறந்தவர்கள் அல்ல முஸ்லிம் பெண்கள்: சாக்ஷி மகராஜ் மீண்டும் சர்ச்சை
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
''செருப்பைவிட சிறந்தவர்கள் அல்ல முஸ்லிம் பெண்கள்'' என்று கூறி மீண்டும் பாஜக தலைவர் சாக்ஷி மகராஜ் சர்ச்சையை கிளப்பியுள்ளார...
''செருப்பைவிட சிறந்தவர்கள் அல்ல முஸ்லிம் பெண்கள்'' என்று கூறி மீண்டும் பாஜக தலைவர் சாக்ஷி மகராஜ் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் என்ற இடத்தில் பேசிய சாக்ஷி மகராஜ், ''நாட்டை அரசியலமைப்புச் சட்டம்தான் இயக்க வேண்டுமே தவிர பத்வாஸ் கிடையாது. மசூதிக்குள் பெண்கள் சென்று தொழுகை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைளையும் நீதித்துறை வழியாக அளிக்க வேண்டும். செருப்பைவிட முஸ்லிம் பெண்கள் ஒன்றும் சிறந்தவர்கள் அல்ல' என்றார்.

''இந்தியாவில் நான்கு மனைவிகள், 40 குழந்தைகள் என்று பெற்றுக் கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. இந்து மதத்தைக் காப்பாற்ற இந்து தம்பதிகள் ஒவ்வொருவரும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்துக்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்கும்'' என்று கடந்தாண்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர்தான் இந்த சாக்ஷி மகாராஜ். இதற்கு முன்னதாக இந்தியாவில் மதரசாக்கள்தான் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று கூறி இருந்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top