காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கை கழுவ தண்ணீர் இல்லை: ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்படும் அவலம்!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மும்பை : மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அங்கு டாக்டர்களுக்கு கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பல ...

மும்பை : மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அங்கு டாக்டர்களுக்கு கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பல ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புறநோயளிகள் மற்றும் அவசர நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக மகாராஷ்டிராவின் லதுர் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஆபரேஷன்களை ஒத்திவைத்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சைக்கு பதில் தொடர்ந்து சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. தண்ணீர் பஞ்சத்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களின் தண்ணீரும் மருத்துவமனைக்கு வந்து சேர இரண்டு நாட்கள் வரை ஆவதாக கூறப்படுகிறது.

தண்ணீர் பஞ்சத்தால் ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்படுவது குறித்து டாக்டர் பரக் நர்கடேவிடம் கேட்ட போது, பொதுவாக ஆபரேஷன் செய்யும் டாக்டர்களும், அவர்களின் உதவியாளர்களும் ஆபரேஷனுக்கு முன்பும், பின்பும் சுமார் 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் நன்றாக தங்களின் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆனால் தற்போது, ஒவ்வொரு ஆபரேஷனுக்கு முன்பும் ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை கை கழுவுவதற்கே தண்ணீர் உள்ளது. இது டாக்டர்களுக்கும், நோயாளிக்கும் பாதுகாப்பற்றது.

அதுமட்டுமின்றி ஆபரேஷனின் போது பயன்படுத்துவதற்கான தண்ணீரும் போதிய அளவு இல்லை. இதனாலேயே ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றார்.

இங்கு ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே மார்ச் மாதம் ஒரு வாரம் வரை ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மராத்வாடா பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால், அடுத்த 15 நாட்களுக்குள் ரயில்கள் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
thanks - dinamalar

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top