Mohammed Farook Mohammed Farook Author
Title: வாலிபரின் உயிரை பறி்த்த செல்போன்- மாடியிலிருந்து தவறி விழுந்து பலியான சோகம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வீட்டின் மொட்டை மாடியில் இருந்து செல்போனில் பேசிய வாலிபர் ஒருவர், தவறி விழுந்து பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை திரு...
வீட்டின் மொட்டை மாடியில் இருந்து செல்போனில் பேசிய வாலிபர் ஒருவர், தவறி விழுந்து பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் வினோபா காலனியில் வசித்து வருபவர் கோதண்டபாணி. இவரது மகன் விவேகானந்தன். 19 வயதான இவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் 2வது மாடியில் இருந்து செல்போனில் பேசியுள்ளார். அப்போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.


இதனை வீட்டில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை.  அடுத்தநாள் காலையில் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், விவேகானந்தன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அப்போது, விவேகானந்தன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். 

இது குறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top