காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவுதி அரேபியாவில் மதக் காவல்துறைக்கு கட்டுப்பாடுகள்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் மதத்துறைக்கு பொறுப்பான காவல்துறையினரின் அதிகாரங்களை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளன....
சவுதி அரேபியாவில் மதத்துறைக்கு பொறுப்பான காவல்துறையினரின்
அதிகாரங்களை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை விதிகளை
அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அந்தக் காவல்துறையினர் தமது
அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என அண்மைய ஆண்டுகளில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.

புதிய விதிகளின்படி, மதத்துறை
காவலர்கள் யாரையும் துரத்திப்
பிடித்து கைது செய்வது, அடையாள ஆவணங்களைக் கேட்பது ஆகியவை தடை செய்யப்படும்.

இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதல்
கிடைத்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள
கடுமையான மத மற்றும் சமூக
நெறிமுறைகளை யாராவது மீறுவதை மதக்காவல்துறையினர் கண்டால், இனி அவர்கள் தன்னிச்சையாக நடவடிக்கை
எடுக்காமால், பொதுவான
காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதன் பிறகு பொதுக் காவல்துறையே சந்தேக நபர்கள் மீதான நடவடிக்கையை
முன்னெடுக்கும்.
BBC

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top