Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் திருநங்கை தேவி களம் இறங்குகிறார்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் திருநங்கையான தேவி களம் இறங்க உள்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் திருநங்கையான தேவி களம் இறங்க உள்ளார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தேவி பல ஆண்டுகளாக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். இவர் தாய்மதி என்ற இல்லம் ஒன்றை தொடங்கி வீடில்லாத 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
 
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் இவர், தமிழ்நாட்டிலேயே ஒரு மிகப்பெரிய தலைவர் ஜெயலலிதா நான் அவரை எதிர்த்து நிற்கவில்லை, மாறாக ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்காக நிற்கிறேன் என கூறியுள்ளார்.
 
மக்களுக்கு அரசியல் மூலம் இன்னும் வலுவாக சேவை செய்ய முடியும் என்பதால் தான் அரசியலை தேர்ந்தெடுத்ததாக கூறும் தேவி, ஏழைகளின் வாழ்க்கையில் வளர்ச்சியை கொண்டுவர பாடுபட போகிறேன். மேலும் ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு சுத்தமான குடி தண்ணீர் கொடுக்கவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க செய்யவும் பாடுபடுவேன் என கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top