vkrnajur vkrnajur Author
Title: அதிமுக வேட்பாளர் மாற்ற கோரி தொகுதி முழுவதும் போஸ்டர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர், ஏப்.14: பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை மாற்றக் கோரி தொகுதி முழுக்க அதிமுகவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பர...

பெரம்பலூர், ஏப்.14:
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை மாற்றக் கோரி தொகுதி முழுக்க அதிமுகவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 4ம் தேதி வெளி யிட்டார். இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பல ருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்களை மாற்ற வேண்டும் என அக் கட்சி ெதாண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு எதிராக பல்வேறு புகார் கடிதங்களை கட்சி தலைமைக்கு ஆதாரத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பலர் வேட்பாளரை மாற்றக் கோரி பல்வேறு வழிகளில் எதிர்ப்பை காட்டி வரு கின்றனர்.. புகார்களின் அடிப்படையில் இது வரை 18 வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து மேலும் பல வேட்பாளர்களை மாற்ற வேண் டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்ற னர்.
இதற்கிடையே பெரம்பலூர் தொகுதி வேட் பாளராக தற்போதைய எம்எல்ஏ தமிழ்செல் வனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட் டது. ஏற்கனவே அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ள கட்சியினர் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை மாற்றி விட்டு வேறு வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். தொடர்ந்து பல வேட்பாளர்கள் மாற்றப்பட் டும், தமிழ்ச்செல்வன் மாற்றப்படாததால், பூலாம்பாடி நகர செயலாளர் வினோத், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் பாப்பம் மாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனி சாமி உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட அதி மு க வி னர் கடந்த 7ம் தேதி போயஸ் கார் டன் சென்று ஜெயலலிதாவிடம் மனு அளிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களை போலீசார் உள்ளே விட மறுத்ததால், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித் த னர். இதையடுத்து அவர்களில் 4 பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் வேட்பாளரை மாற்றக் கோரி ஜெயலலிதாவின் உதவியாளரிடம் மனு கொடுத்துவிட்டு வந்தனர்.
அதன் பின்பும் வேட்பாளர் மாற்றப் படாத தால் விரக்தியடைந்த அதிருப்தியாளர் நேற்று இன்று தொகுதி முழு வ தும், தமிழ்ச் செல்வனுக்கு எதிராக போஸ்டர்களை ஒட் டினர். அதில் ‘வேட்பாளர் தமிழ்செல் வனை மாற்று, தொகுதி மக்களை மதிக்கத் தெரி யாதவர் வேட்பாளரா! 5 ஆண்டுகள் சுருட் டி யது போதும்! அதிமுக பொதுச்செயலாளர் அவர்களே, களைஎடுத்தால் வெற்றி நிச்சயமாக ச யம், இப்படிக்கு பொது மக் கள், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி’ என அச்சிடப்பட்டுள் ளது.
இந்த போஸ் டர் விவகாரம் அதிமுகவினரி டையே பர ப ரப்பை ஏற்படுத் தி யுள் ளது. இது பற்றி அறிந்த எம் எல்ஏ தமிழ்ச் செல் வன் தனது ஆதரவாளர் களை கொண்டு அந்த போஸ்டர்களை கிழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top