காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ’வைகோ வாழ்க’ எனக் கூறிய தொண்டரை அரைந்த திமுக மாவட்ட செயலாளர்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ’வைகோ வாழ்க’ எனக் கூறிய தொண்டரை தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர் அரைந்ததால் பரபரப்பு நிலவியது.  ...
திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ’வைகோ வாழ்க’ எனக் கூறிய தொண்டரை தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர் அரைந்ததால் பரபரப்பு நிலவியது.
 
நேற்று ஞாயிறு மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்யாபாபா திருமணமண்டபத்தில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக மண்டபத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரங்களில் கொடிகம்பங்கள் நடப்பட்டு இருந்தன.
 
மாலையில் கூட்டம் நடைபெற தொடங்கியதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் புதிய தமிழகம் மற்றும் ஏனைய கூட்டணி கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்களை பயன்படுத்தாமல் திமுக கொடி மட்டுமே கட்டப்பட்டிருந்தது.
 
இதை கண்ட காங்கிரசார் இதுகுறித்து மாவட்டத் தலைவர் காமராஜிடம் முறையிட்டனர். அதைக் கேட்கிறேன் என கூறி திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமிடம் கேட்டார். அதனால் மண்டபத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
 
நிருபர்கள் படம் எடுப்பதை அறிந்த பெரியசாமி காங்கிரசாரிடம் நீங்கள் இருப்பதாக இருந்தால் இருக்கலாம் இல்லையெனில் வெளியேறிச் சென்றுவிடலாம் எனக் கூறியதை கேட்ட காங்கிரசார் அதிர்ச்சியடைந்தார்கள்.
 
உடனடியாக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தினை புறக்கணிப்பதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மண்டபத்தைவிட்டு வெளியேறி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
 
இதற்கிடையில் பெரியசாமி வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தபோது தொண்டர் ஒருவர் வைகோ வாழ்க என கோஷம் எழுப்பியதால் கோபம் அடைந்த பெரியசாமி அவரது முகத்தில் அறைந்ததுபெரும் பரபரப்பை கோவில்பட்டியில் ஏற்படுத்தியது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top