vkrnajur vkrnajur Author
Title: மெய்சிலிக்க பேசிய ஆ௵ர் ஷானவாஸ்! ஆச்சரியத்தில் மக்கள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மக்கள் நலக் கூட்டணியின் சார்பில், குன்னம் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துனை பொதுச் செயலாளர்...
மக்கள் நலக் கூட்டணியின் சார்பில், குன்னம் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துனை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ். இவர் தேர்தல் செலவுகளுக்காக மக்களிடமே கையேந்துவதை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள் குன்னம் தொகுதி மக்கள். 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் தொகுதியில் உள்ள அங்கனூர் கிராமம், திருமாவளவன் பிறந்து வளர்ந்த ஊர். அவரது சொந்த ஊரில் களமிறங்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல், தேர்தல் பிரசாரத்திற்கு செலவு செய்ய பணமின்றி தவித்து வந்தார். இந்நிலையில், கம்யூனிஸ்ட்டுகளின் பாணியில் தொகுதி மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.

'தி.மு.க, அ.தி.மு.க போன்ற பணபலம் வாய்ந்த கட்சிகளுக்கு மத்தியில் எளியவனாக உங்கள் முன் நிற்கிறேன். எனக்கென்று செலவு செய்ய எந்த தொழிலதிபரும் இல்லை. அதை நான் என்றைக்குமே விரும்பியது கிடையாது. உங்களிடமே கையேந்துகிறேன்' என உணர்வுபூர்வமாகப் பேச, நெகிழ்ந்து போனார்கள் அந்தப் பகுதி மக்கள். மறுகணமே, தாங்கள் உழைத்த பணத்தின் சிறு பகுதியை வேட்பாளருக்கு தாராள குணத்துடன் வாரிக் கொடுத்தனர். கடந்த சில நாட்களில் மட்டும் பத்து ரூபாய், ஐம்பது ரூபாய் என மூன்று லட்சம் ரூபாய் வரையில் கொடுத்து உதவியுள்ளனர். குன்னம் தொகுதி மக்களின் அன்பால் நெகிழ்ந்து போயிருக்கிறார் ஆளூரார். 

ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம்.

" எங்கள் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டாலும், தலைவர் திருமா அவர்களின் தாயாரின் ஓட்டு எனக்கு மட்டுமே விழப் போகிறது என்பதே கூடுதல் மகிழ்ச்சி. இன்று காலையில் தலைவரின் அம்மாவை சந்தித்து அவரது வாழ்த்தை பெற்றுக் கொண்டு, பிரசாரத்தை தொடங்கியிருக்கிறேன். மனம் முழுக்க உற்சாகம் மட்டுமே நிறைந்திருக்கிறது. கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், தேர்தல் பிரசார செலவுகளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். இரவு சரியான உறக்கம்கூட வரவில்லை. வேட்பாளர்களுக்குச் செலவு செய்யும் அளவுக்கு எங்கள் கட்சியில் வலிமையில்லை. என் குடும்பத்தின் பொருளாதார சூழல்களும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. துண்டறிக்கை, வாகனத்தில் பிரசாரம் என்று கிளம்பினாலும், ஐந்து லட்ச ரூபாய் வரையில் தேவைப்படுகிறது.

தவிர, குன்னம் தொகுதி முழுக்க தி.மு.க, அ.தி.மு.கவினர் சுவர் விளம்பரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இவற்றின் செலவே ஐம்பது லட்சத்தைத் தாண்டும். இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் செலவுக் கணக்குகளுக்குள் வருமா? என்று தெரியவில்லை. இவர்களது ஆடம்பரத்தையும் தாண்டி எங்கள் கட்சியின் மோதிரம் சின்னத்தையும், மக்கள் நலக் கூட்டணியின் லட்சியங்களையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கான செலவு என்பது, ஆணையம் வரையறுத்துள்ள செலவுகளுக்குள் அடங்கிவிடும்.

தி.மு.க, அ.தி.மு.கவின் பிரசார நடைமுறைகளால்தான், எங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இவற்றை ஈடுகட்டும் அளவுக்கு பொருளாதார வலிமை இல்லாததால், மக்களிடம் கையேந்தினேன். அவர்கள் எந்த மறுப்பையும் தெரிவிக்காமல், குடும்பத்தில் ஒருவனாக எனக்குத் தோள் கொடுக்கிறார்கள். முகநூலிலும் நான் விடுத்த வேண்டுகோளை பார்த்து, குன்னம் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் இதுவரை எனக்கு எனக்கு வாரிக் கொடுத்த தொகை மூன்று லட்ச ரூபாயை தாண்டி உள்ளது.

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திராவிடக் கட்சிகளின் மீதான மக்களின் கோபத்தை கண்கூடாகப் பார்க்கிறேன். மிக எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, குன்னம் மக்கள் காட்டும் அளவுகடந்த அன்பு நெகிழ வைக்கிறது" என்றவாறு, மாலை நேர பிரசாரத்திற்கு கிளம்பினார் ஷாநவாஸ். 

'மக்களிடம் சென்று மக்களிடமே கற்றுக் கொள்' என்றார் லெனின். சிறுத்தைகளும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பவர்கள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் தோழர்.ஆளூர் ஷாநவாஸ். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top