Mohammed Farook Mohammed Farook Author
Title: உளுந்தூர்பேட்டையில் மமக பின்வாங்கியதின் ரகசியம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொண்டாமுத்தூர், ஆம்பூர், ராமநாதபுரம், நாகப்பட்டிணம், உளுந்தூர் பேட்டை ஆகிய 5 தொகுத...
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொண்டாமுத்தூர், ஆம்பூர், ராமநாதபுரம், நாகப்பட்டிணம், உளுந்தூர் பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் திடீரென உளுந்தூர்பேட்டை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க.வுக்கு விட்டு கொடுத்தது. இதையடுத்து தி.மு.க. வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் 2006-ம் ஆண்டு நடந்த  சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலை சந்தித்தார். தமிழ்நாடு முழுவதும் அவரது கட்சி தனித்து போட்டியிட்டது.

விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி சார்பில் விஜயகாந்த் மட்டுமே சட்டசபைக்கு சென்றார்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது. விஜய காந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற்றார்.

ஆனால் தற்போது விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்துள்ளதால் மீண்டும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அதே போல் தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக அதிக பலம் உள்ளது. எனவே விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டால் மனிதநேய மக்கள் கட்சியால் அவரை சமாளிக்க முடியாது என கருதியே தி.மு.க. இந்த தொகுதியை அக்கட்சியிடம் இருந்து கேட்டு பெற்று உள்ளது.
வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேலுவை களத்தில் இறக்கி உள்ளது.

ஒரு வேளை விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில்  நிற்பது உறுதியானால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை விட பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தவும் தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அதற்கான காரணத்தை இப்போது கூற முடியாது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், உளுந்தூர்பேட்டை தொகுதியை திருப்பிக் கொடுத்ததால் வேறு தொகுதியை கேட்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. எனவே இப்போது வேறு தொகுதி கேட்பது நாகரீகமாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தான் போட்டியிடவில்லை என்றும், விஜயகாந்த் போட்டியிட்டால் சமாளிக்க முடியாது என்பதால் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் விஜயகாந்த்தை தங்கள் கூட்டணியில் சேர்க்க தி.மு.க. கடும் முயற்சி மேற்கொண்டது. அவருடன் ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால் விஜயகாந்தின் ஏற்க முடியாத நிபந்தனைகளால் கூட்டணி அமையவில்லை. திடீர் என்று மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார்.

பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் விஜயகாந்த் நிராகரித்து விட்டாரே என்று தி.மு.க. தரப்பு விஜயகாந்த் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
எனவே அவரை தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கி உள்ளது. இதற்கான வியூகம் வகுத்துதான் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளருக்குப் பதில் தி.மு.க.வே களத்தில் குதித்து இருப்பதாக தெரிய வருகிறது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top