காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ரஜினியை போல் பின் வாங்க மாட்டேன்: விஜயகாந்த் ஆவேச பேச்சு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று தே.மு.தி.க. பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவரும், மக்கள...
சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று தே.மு.தி.க. பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவரும், மக்கள் நலக் கூட்டணியின் முதல்– அமைச்சர் வேட்பாளருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. அதனால் எந்த பயணும் இல்லை. தமிழகத்தை தலைநிமிரச் செய்வோம் என்று கூறியே தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்த 2 கட்சிகளும் குட்டிச் சுவராக்கி விட்டன.

அவர்களிடம் முரட்டு பணம் இருக்கிறது. எங்களிடம் மக்கள் மனம் உள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, நாம் எவ்வளவோ கஷ்டப் பட்டோம். மீண்டும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் அது போன்ற கஷ்டத்தையே அனுபவிக்க வேண்டி இருக்கும்.

நான் நடித்த கஜேந்திரா படம் வெளியான சமயத்தில், அதில் இடம் பெற்ற தமிழன்…. தமிழன்…. என்கிற பாடலை நிறுத்துமாறு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஆனால் நான் அதைக் கண்டு பயப்படாமல் படத்தை வெளியிட்டேன். நல்ல மனிதர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன். ரஜினிகாந்தை போன்று பின்வாங்க மாட்டேன். அவர் நல்ல நண்பர். அடிக்கடி இருவரும் போனில் பேசிக்கொள்வோம்.

தமிழகத்தில் மாற்றம் ஏற்பட மக்கள் நலக் கூட்டணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top