Mohamed Farook Mohamed Farook Author
Title: அமிதாப், ஐஸ்வர்யா ராய் பனாமாவில் பணம் பதுக்கல் - அதிர்ச்சி தகவல்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்க...
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது.
 
‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் பன்னாட்டு ஊடகங்கள் பலவற்றின் புலனாய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
 
11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாகியிருக்கிறது. இந்த 140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் இன்னாள், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்:
 
இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
 
ஸ்விஸ் வங்கிகளில் தனி நபர்கள் தங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியும். ஆனால் பனாமா வங்கியில் அது சாத்தியமில்லை. பனாமா வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்க வேண்டும்.
 
அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அவ்வாறாக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பணத்தை சேமிக்கலாம். வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் பணம் முதலீடு செய்பவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் உச்சபட்ச ரகசியமாக பேணும் நிலையில், பிரபலங்கள் பலரை இப்படி அம்பலப்படுத்தும் வகையில் தகவல் எப்படி கசிந்தது என்பது கவனிக்கத்தக்கது.
 
இதுகுறித்து ஜெர்மனியின் முனீச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் என்ற நாளிதழின் நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, “அடையாளத்தை வெளியிடாத உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பணபலன் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தங்கள் அடையாளம் எவ்விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் வலியுறுத்தினர்” என்றார்.
 
இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய பட்டியலில் உள்ள இந்தியர்கள் எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.“பிரதமரின் ஆலோசனையின் படி,சிபிடீடி, மற்றும் ஆர்பிஐ உட்பட பன்முகமைக் குழு இந்தக் கசிவுகளின் விவரங்களை ஆராய்ந்து அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று ஜெட்லி கூறியுள்ளார்.
 
பனாமாவில் பணம் பதுக்கியுள்ளதாக கூறப்படும் இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 500 முக்கியஸ்தர்கள் அடங்கிய ரகசிய பனாமா பேப்பர்ஸ் பட்டியலை உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தீர விசாரிக்கும் என்று அதன் தலைவரான, முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top