Mohammed Farook Mohammed Farook Author
Title: அஜித் வந்தால் வரட்டும்... அலட்சிய நடிகர் சங்கம்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஏப்ரல் 17 நடக்க உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டி, அஜித்தை மையப்படுத்தி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.  அஜித், நட்சத்திர கிரிக்கெட் போட்டியி...
ஏப்ரல் 17 நடக்க உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டி, அஜித்தை மையப்படுத்தி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

அஜித், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்கு பதிலாக நன்கொடை தர முன்வந்ததாகவும், அதனை ஏற்க நடிகர் சங்கம் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
நன்கொடை வாங்கி கட்டிடத்தை கட்டினால், அதிக நன்கொடை தருகிறகிறவர்கள் சங்கத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பங்களிப்பு செலுத்த முடியாத நலிந்த கலைஞர்களுக்கு அது ஒரு மனத்தடையாக அமையும் என்று கூறியே நன்கொடையை தவிர்த்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடிகர் சங்கம் நியாயப்படுத்துகிறது. 
 
அவர்களின் நியாயப்படியே பார்த்தாலும், முன்னணி நடிகர், நடிகைகள் மட்டும்தான் இந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்களிப்பு செலுத்தப் போகிறார்கள். நலிந்த கலைஞர்கள் மைதானத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகம். அப்படியிருக்க, நலிந்த கலைஞர்கள் எப்படி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கெடுப்பதாக கூற முடியும்?
 
இந்நிலையில், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் அஜித் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த பொன்வண்ணன், வருவதும் வராததும் அவர் விருப்பம். யாரும் யாரையும் வற்புறுத்தவில்லை. சக கலைஞர்களின் நலனுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி இது என்று பதிலளித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top