Mohamed Farook Mohamed Farook Author
Title: வைகோவை பொளந்துகட்டிய சந்திரகுமார்: அதிமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொள்வாரா?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தேமுதிகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வ...
தேமுதிகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்திரகுமார் கடுமையாக சாடினார்.  
 
திமுகவிடம் பணம் வாங்கிவிட்டு தான் தேமுதிகவை உடைக்கும் முயற்சியில் சந்திரகுமார் போன்றோர் இட்டுபட்டுள்ளதாக வைகோ நேற்று கருத்து தெரிவித்தார். வைகோவின் இந்த கருத்துக்கு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரகுமார் பதிலளித்தார்.
 
எங்கள் பிரச்னையில் வைகோ தலையிட வேண்டாம். இது எங்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம், அவர் கட்சியில் இருக்கும் பிரச்னைகளை வைகோ முதலில் கவனிக்கட்டும் என்றார் சந்திர குமார்.
 
மேலும், திமுகவில் இருந்து வைகோ பிரிந்து தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்கும் போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக் கொண்டா திமுகவை உடைத்தார்? என சந்திர குமார் கேள்வி எழுப்பினார். அவர் அதிமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொண்டால் நான் திமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொள்கிறேன் என்றார் சந்திரகுமார்.
 
திமுகவில் பிரச்னை என்றதும் அதிலிருந்து வைகோ வெளியேறலாம். இதை நாங்கள் செய்தால் அது பற்றி அவதூறாகப் பேசுவதா எனவும் சந்திரகுமார் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top