vkrnajur vkrnajur Author
Title: பசும்பலூரில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி செய்த பெண் இயற்கை எய்தினார்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வேப்பந்தட்டை அருகே ஆசிரியர் திட்டியதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கல்லூரி மாணவி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்த...





வேப்பந்தட்டை அருகே ஆசிரியர் திட்டியதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

கல்லூரி மாணவி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் சீதா (வயது 20). இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் பருவ தேர்வு எழுதும் மாணவ–மாணவியர்களில் முழுமையாக கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு கடந்த வாரம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

அப்போது சீதா கட்டணம் செலுத்தாததால் ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை எனவும், ஏன் பணம் கட்டாமல் இருக்கிறாய் என அலுவலக மேலாளர் மற்றும் தலைமை ஆசிரியர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீதா பருத்தி செடிக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாயில் நுரைத்தள்ளியவாறு வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக சீதாவை அவரது குடும்பத்தினர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பிறகு அங்குலிருந்து திருச்சி மருத்துவ மனைக்கு மாற்றப்டபட்டது.



பிறகு திருச்சியில் அனுமதிக்கப்பட பெண் மாலை 29.4.16 இன்று தனியார் மருத்துவமனையிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


இறப்பு:
30.4.16 நேற்று 5.30pm சீதா என்கிற பெண் இயற்கை எய்தினார்.
பெற்றோர்கள் உறவினர்களும் மற்றும் நட்பர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top