vkrnajur vkrnajur Author
Title: இந்தியாவின் முன்னணி பைக் பந்தய வீராங்கனை சாலை விபத்தில் மரணம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இந்தியாவின் முன்னணி பெண் பைக் பந்தய வீரர் வேணு பாலிவால் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய ...
இந்தியாவின் முன்னணி பெண் பைக் பந்தய வீரர் வேணு பாலிவால் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் வேணு பாலிவால் தனது ஹார்லி டேவிட்சன் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையில் கவிழ்ந்து விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த வேணு பாலிவால், அருகே இருந்த கையாராஸ்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

ஜெய்பூரைச் சேர்ந்த வேணு பாலிவால், தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பைக் ரேஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top