vkrnajur vkrnajur Author
Title: வழிபாட்டுத்தலங்களில் பட்டாசு வெடிக்க தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள கோவிலில், வாண வேடிக்கையின்போது தீ விபத்து ஏற்பட்டதில் 110 பேர் உயிரிழந்தனர். 350 க்கும் மேற்பட்டவர்கள் காய...
கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள கோவிலில், வாண வேடிக்கையின்போது தீ விபத்து ஏற்பட்டதில் 110 பேர் உயிரிழந்தனர். 350 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், வாண வேடிக்கையில் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்திற்கு, நீதிபதி சிதம்பரேஷ் ஒரு கடிதம் கொடுத்தார்.
இதை பொது நல மனுவாக ஏற்ற கேரள நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்தியது. அதன்படி, இந்த மனுவை நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை வழிபாட்டுத்தலங்களில் இரவு நேரங்களில் வெடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தனர்.மேலும், பகல் நேரத்தில் பட்டாசு வெடித்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தமாக பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றும் நீதிபதிகளின் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
அத்துடன், கொல்லம் வெடி விபத்து குறித்து, தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிடலாம் என்றும் பரிந்துரை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top