Mohammed Farook Mohammed Farook Author
Title: பொருளாதாரத்தை சீர்திருத்தும் திட்டங்களுக்கு சவுதி அரேபிய அரசு ஒப்புதல்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
எண்ணெய் வளம் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தும் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சவுதி...
எண்ணெய் வளம் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தும் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்த முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பதினைந்து ஆண்டுகளில், எண்ணெய் பொருளாதாரத்தை மட்டுமே நாடு சார்ந்திருக்கும் நிலையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க திட்டமிடபட்டு உள்ளது.

வரிகளை அதிகரித்து, அரச செலவினங்களைக் குறைக்க அரசு விரும்புகிறது. அதே சமயம் தனியார் வர்த்தகத்துக்கு பெரிய பங்கை அளிக்கவும் புதிய பொருளாதாரக் கொள்கை திட்டமிட்டு உள்ளது.

அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின்படி உலகெங்கும் முதலீடு செய்யும் நோக்கில் இரண்டு ட்ரில்லியன் டாலர் நிதியம் உருவாக்கப்படும்.

அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் பங்குகளை விற்று அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு இந்த நிதியத்துக்கு தேவையான ஆதாரங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. எனினும் முதல் கட்டமாக அராம்கோவின் ஐந்து சதவீத பங்குகளை மட்டுமே விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top