காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: நமீதாவை கேட்டு அதிமுக தொண்டர்கள் ஆவேசம்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அதிமுக சார்பில் நடிகர் செந்தில் கலந்துகொண்ட கூட்டத்தில் நடிகை நமீதாவை கேட்டு அதிமுக தொண்டர்கள் ஆவேசம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட...
அதிமுக சார்பில் நடிகர் செந்தில் கலந்துகொண்ட கூட்டத்தில் நடிகை நமீதாவை கேட்டு அதிமுக தொண்டர்கள் ஆவேசம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
சமீபத்தில் நடிகை நமீதா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், திருப்பூரில் ஞாயிறன்று அதிமுக சார்பில் நடிகர் செந்தில் பங்கேற்ற பிரச்சாரம் நடைபெற்றது.
 
அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் கோபாவேசமாக அப்பகுதி கவுன்சிலர் நிஜாமுதீனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அருகில் சென்று என்ன நடக்கிறது என்று கவனித்தபோதுதான் விசயம் தெரிந்தது.
 
அந்த தொண்டர்கள், நடிகை நமீதா வருவதாகச் சொல்லித்தானே எங்களை அழைத்து வந்தீர்கள்! ஆனால் இவரைக் கூட்டி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
 
அதற்கு பதிலளித்த கவுன்சிலர் நிஜாமுதீன், பொறுங்கள். இப்போதுதானே நமீதா கட்சியில் சேர்ந்திருக்கிறார். நிச்சயம் அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top