காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: தேர்தல் பரப்புரையின் போது மேடையில் திக்கித் திணறிய விஜயகாந்த்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தேர்தல் பரப்புரையின்போது சின்னத்தை மறந்தும் வேட்பாளர்கள் பெயர் தெரியாமலும் விஜயகாந்த் திக்கித் திணறினார்.  ஜெயலலிதா தன்னை நேரடியாக விமர...
தேர்தல் பரப்புரையின்போது சின்னத்தை மறந்தும் வேட்பாளர்கள் பெயர் தெரியாமலும் விஜயகாந்த் திக்கித் திணறினார். 

ஜெயலலிதா தன்னை நேரடியாக விமர்சிக்காமல் சிறிய நடிகர்களை வைத்து விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் விஜயகாந்த். விலைவாசி ஏற்றம்தான், மாற்றம்  தந்த மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தந்த ஏற்றமா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தேமுதிக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய்க்கு வழங்குவோம் எனக் கூறப்பட்டுள்ளது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார். இலவச அரிசி வழங்குவது எப்படி சாத்தியமானதோ அதே போல் பெட்ரோல் விலையை 40 ரூபாயாக குறைப்பதும் சாத்தியமாகும் என்றார்.

திமுக தலைவர் கருணாநிதியை  நேரடியாகத் திட்டும் ஜெயலலிதா தம்மை சிறிய நடிகர்கள் மூலம் திட்ட வைப்பதாக கூறினார். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்ததாக ஜெயலலிதா கூறியதை குறிப்பிட்ட விஜயகாந்த், விலை வாசி ஏற்றம்தான் மக்களுக்கு அளித்த ஏற்றமா எனக் கேள்வி எழுப்பினார்.

கூட்டத்தில் தொண்டர்களின் கோஷத்தை விஜயகாந்த் கட்டுப்படுத்த முயன்றபோது சலசலப்பு ஏற்பட்டது. வேட்பாளர்களின் பெயர்களை கூற தடுமாறிய விஜயகாந்த் தர்மபுரி கூட்டம்தான் நேற்று பேச வேண்டிய கடைசி கூட்டம் என்பதை மறந்து சேலத்தில் பேச வேண்டியிருப்பதாகக் கூறி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் தெரியாமல் குழம்பிய விஜயகாந்த் வேட்பாளரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டார்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top