vkrnajur vkrnajur Author
Title: திருமாந்துறை அருகே ஏ.டி.எம்.மையத்திற்கு எடுத்து சென்ற வேனில் பணம் சிக்கியது!உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் திரும்ப ஒப்படைப்பு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப, வேனில் கொண்டு சென்ற ரூ.71½ லட்சம் தேர்தல் பறக்கும...
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப, வேனில் கொண்டு சென்ற ரூ.71½ லட்சம் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து உரியவர்களிடம் அந்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

வாகன சோதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காகவும், தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள் பரிசு பொருட்களாக வழங்கப்படுவதை தடுப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருமாந்துறை அருகே லப்பைக்குடிகாடு செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணராஜ் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.71½ லட்சம் சிக்கியது

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் ரூ.71 லட்சத்து 41 ஆயிரத்து 233 கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் சி.எம்.எஸ். என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களான சுரேந்திரன், ராஜ்குமார் என்றும், அவர்கள் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்புவதற்காக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் பணத்தை எடுத்து செல்வதாகவும், கூறினர். ஆனால் அவர்களிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அதிகாரிகள் பணம் மற்றும் வேனை பறிமுதல் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

திரும்ப ஒப்படைப்பு

பின்னர், வருமான வரித்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை துணை ஆணையர் ராமலிங்கம் வாகனத்தை ஆய்வு செய்தார். இந்நிலையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த அந்த தனியார் நிறுவன அதிகாரிகள் பணத்திற்கான உரிய ஆவணங்களை கொண்டு வந்து, அதிகாரி ராமலிங்கத்திடம் கொடுத்தனர். அந்த ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, அவை சரியான ஆவணங்கள்தான் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், வாகனம் மற்றும் பணத்தை தனியார் நிறுவன அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்தார். வாகன சோதனையில் ரூ.71½ லட்சம் சிக்கிய சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top