காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ராமநாதபுரத்தில் தொழுகை நடத்தவிடாமல் பள்ளி வாசலுக்கு பூட்டு! போட்டதை கண்டித்து மக்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கீழக்கடாரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தவிடாமல் பள்ளி வாசலுக்கு பூட்டு போட்டதை கண்டித்து...
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கீழக்கடாரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தவிடாமல் பள்ளி வாசலுக்கு பூட்டு போட்டதை கண்டித்து சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்யப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கடலாடி தாலுகா கீழக்கடாரம் கிராமத்தில் உள்ள 70 குடும்பங்களை சேர்ந்த மக்கள் ஒன்றினைந்து புதிய பள்ளி வாசல் கட்டி வருகின்றனர். இந்த பள்ளிவாசலில் கட்டிட பணிகள் நிறைவு பெறாத நிலையில் அங்கு தொழுகை வழிபாடு நடந்து வந்தது. 

இந்நிலையில் கடலாடி தாசில்தார் தலைமையில் வந்த வருவாய் துறையினர் பள்ளிவாசல் புறம்போக்கு இடத்தில் கட்டி இருப்பதாக கூறி பள்ளிவாசலுக்கு சீல் வைத்து சென்றனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவியது. பள்ளிவாசலில் சீல் வைக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் வெளியே தொழுகை நடத்தி வந்துள்ளனர். 

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் வெளியே தொழுகை நடத்தக்ககூடாது என வருவாய்த் துறையினர் தடை விதித்தனர்.
தாசில்தார் மேற்கொண்ட இந்த வாய்மொழி உத்தரவை தொடர்ந்து மக்கள் தொழுகை நடத்த முடியாமல் அவதியடைந்தனர்.

இதையடுத்து ஜமாத் தலைவர் அகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். இது குறித்து மாநில தேர்தல் ஆணையாளருக்கும் மாவட்ட கலெக்டர் நடராஜனுக்கும் மனு அனுப்பி உள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top