Mohammed Farook Mohammed Farook Author
Title: குஷ்புவுக்குக் கொடுப்பதற்கு பதில் ஜோதிமணிக்குக் கொடுங்கள்- ராகுல்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
குஷ்புவுக்கு ஆர்.கே. நகர் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாரானது. ஆனால், ஆர்.கே. நகர் வேண்டாம், ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை கொடுங...
குஷ்புவுக்கு ஆர்.கே. நகர் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாரானது. ஆனால், ஆர்.கே. நகர் வேண்டாம், ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை கொடுங்கள் என்று ராகுல் கூறிவிட்டாராம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் குஷ்பு போட்டியிடும் வகையில், அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க திமுக மேலிடம் முன்வந்தது.

ஜெயலலிதாவுக்கு சரியான போட்டியாகவும் இருக்கும், குஷ்புவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் திமுக இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க நினைத்தது.

இது குறித்து இளங்கோவனிடமும் பேசியது. ஆனால், ஒரு தொகுதியை விட்டுக் கொடுப்பதாக இருந்தால், அது ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று ராகுல் உறுதியாகக் கூறிவிட்டாராம்.

அதே சமயம், குஷ்புவைப் பற்றியோ, ஆர்.கே. நகர் தொகுதியைப் பற்றியோ ராகுல் ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.
இதனால், கொடுக்க வந்தவர்களுக்கும், வாங்க நினைத்தவர்களுக்கும் தர்மசங்கடமாக போய்விட்டதாம்.

என்னதான் இருந்தாலும் கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைத்தவர்களின் பின்னால் இருப்பதால், கட்சியின் சிறந்த தலைமை என்பதை ராகுல் நிரூபித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் சிலாகிக்கின்றனராம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top