Mohammed Farook Mohammed Farook Author
Title: வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வாகனங்களை இயக்கும் மைனர் சிறுவர்கள் பிடிபட்டால் அவர்களின் பெற்றோர் மீது தண்டனை விதிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து...
வாகனங்களை இயக்கும் மைனர் சிறுவர்கள் பிடிபட்டால் அவர்களின் பெற்றோர் மீது தண்டனை விதிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபகாலமாக மைனர் சிறுவர்கள், வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ள பல்வேறு சாலை விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது, இதன் காரணமாக மைனர் சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தேசித்துள்ளது,

அதன்படி மைனர் சிறுவர்கள் வாகனங்களை இயக்கி பிடிபட்டால் அவர்களது பெற்றோர் மீது தண்டனை விதிக்கப்படும் என தெரியவருகிறது.
இது குறித்து ஆலோசித்து வரும் மத்திய அரசு மாநில அரசுகளிடமும் கருத்து கேட்டு, அதன் பின்னர் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரியவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் மூலமாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம்  தெரிவிக்கிறது, இந்த தொகையானது நாட்டின் ராணுவ பட்ஜெட்டை விட சிறிதளவே குறைவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

thanks - adiraipirai

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top