Mohammed Farook Mohammed Farook Author
Title: அமெரிக்க முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஒபாமா!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறி வரு...
அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறி வரும் அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் உள்ள டெட் கிரஸுக்கு, அதிபர் பராக் ஒபாமா நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

டெட் கிரஸின் பூர்வீகம் கியூபா. அதை வைத்தே கிரஸுக்குப் பதில் கொடுத்துள்ளார் ஒபாமா. உங்களது தந்தை ஏன் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார் என்பதை ஒருமுறை நினைத்துப் பாருங்கள். அதன் பிறகு இப்படிப் பேச மாட்டீர்கள் என்று அவர் டெட் கிரஸுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

கிரஸின் கோரிக்கை அமெரிக்க கலாச்சாரத்திற்கு முரணானது. அது ஆக்கப்பூர்வமான சிந்தனையும் அல்ல என்றும் ஒபாமா கூறியுள்ளார். கியூபா பயணத்தை முடித்து விட்டு அர்ஜென்டினா வந்த அவர் அங்கு அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மார்கியுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “நான் இப்போதுதான் ஒரு நாட்டிலிருந்து (கியூபா) கிளம்பி வந்துள்ளேன். அந்த நாட்டிலும் இப்படித்தான் குடிமக்களைக் கண்காணிக்கும் நிலை உள்ளது. அதனால்தான் கிரஸின் தந்தை கூட அமெரிக்காவுக்குத் தப்பி வந்தார். அமெரிக்கா ஒரு சுதந்திர நாடு என்பதால் அவர் அங்கு வந்தார். அதை கிரஸ் மறந்து விடக் கூடாது.

முஸ்லீம்களை இன ரீதியாக, மத ரீதியாக குறி வைத்துத் தனிமைப்படுத்தக் கோருவது அமெரிக்கக் குணமல்ல. அது அமெரிக்க கலாச்சாரமும் அல்லை. ஆக்கப்பூர்வமான சிந்தனையும் அல்ல. இது நமது பலத்தை பலவீனமாக்கி விடும். தீவிரவாதத்தை ஒடுக்க நாம் முயற்சித்து வருவதை சீர்குலைத்து விடும்.

அமெரிக்காவின் மிகப் பெரிய பலமே அதன் தேசபக்தி கொண்ட மக்கள்தான். முஸ்லீம் அமெரிக்க சமுதாயம், நமது நாட்டின் மிகப் பெரிய பலம். கிரஸ் போன்றோரின் பேச்சால் அவர்கள் தனிமையாக உணர வேண்டிய அவசியமே இல்லை.
 
ஐஎஸ் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டியது நம் அனைவரின் முன்பும் உள்ள மிகப் பெரிய பணி. அதை விட வேறு முக்கியப் பணி இப்போது நம்மிடம் இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்து அதைச் சாதிக்க வேண்டும்” என்றார் அவர்.

முன்னதாக பிரஸ்ஸல்ஸ் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தபோது கிரஸ் இதுபோல பேசியிருந்தார். மேலும் அதிபர் ஒபாமா தனது லத்தீன் அமெரிக்க பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என்று குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியில் உள்ள 3 முக்கிய வேட்பாளர்களும் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்து.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top