vkrnajur vkrnajur Author
Title: விஷக் காளான் சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:- மிஸோரம் மாநிலம் மாமிட் நகரில் வசித்து வந்த சாய்குமா என்பவரின் மனைவி ராம்தி...
இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:-
மிஸோரம் மாநிலம் மாமிட் நகரில் வசித்து வந்த சாய்குமா என்பவரின் மனைவி ராம்தின்மவீ, கடந்த 4 ஆம் தேதி அருகிலுள்ள வனப் பகுதியில் காட்டுக் காளான்களைச் சேகரித்து, தனது வீட்டில் சமைத்துள்ளார்.
அதை, அவர்களது குடும்பத்தில் உள்ள 6 பேரும், அவர்களது விருந்தினர் ஹிரிதாவும் சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து, இதை சாப்பிட்டவர்கள் வயிற்று வலியாலும், பேதியாலும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாய் குமாவும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, ராம்தின்மவீ, அவரது மூத்த மகன் சாய்மிங்தங்கா, மூன்று வயது மகள் மிரியாமி, விருந்தாளி ஹிரிதா ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் ஐஸால் மருத்துவமனைக்கு கடந்த 8 ஆம் தேதி கொண்டுச் செல்லப்பட்டனர்.
ஆயினும் அவர்களில், ராம்தின்மவீயும், சாய்மிங்தங்காவும் உயிரிழந்தனர். குடும்பத்தினரை இழந்த மூன்று வயது சிறுமி மிரியாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவருக்கு தொண்டு அமைப்புகள் நிதியுதவி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top