vkrnajur vkrnajur Author
Title: உலகளவில் மரண தண்டனைகள் 54சதவிகிதம் உயர்வு: முதல் 3 இடங்களில் சீனா, ஈரான்,பாகிஸ்தான்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
2015ம் ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை 54 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு அமைப்...
2015ம் ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை 54 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டில் 25 நாடுகளில் ஆயிரத்து 634 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகிலேயே அதிகளவு மரண தண்டனை தரும் நாடாக சீனா திகழ்வதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கைகள் ரகசியமாக பராமரிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் மரண தண்டனை வழங்குவதில் முன்னணி வகிப்பதாக பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவை தவிர்த்துவிட்டு பார்த்தால் இம்மூன்று நாடுகளில் மட்டும் 90 சதவிகித மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top