காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: என்ன கொடூரம்.. ரூ.50 லட்சத்துக்காக அண்ணன் மகளை கடத்திய தம்பி.
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கனிகிரியைச் சேர்ந்தவர் ஸ்ரீவாசலு ரெட்டி. இவரது இளைய மகள் சகஸ்ரா (வயது 6). நேற்று முன்தினம் மதியம் வீட்...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கனிகிரியைச் சேர்ந்தவர் ஸ்ரீவாசலு ரெட்டி.
இவரது இளைய மகள் சகஸ்ரா (வயது 6). நேற்று முன்தினம் மதியம் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சகஸ்ரா கடத்தப்பட்டார்.
தனது தம்பி ராஜேஷ் ரெட்டிதான் மகளை கடத்தி இருக்கலாம் என்று ஸ்ரீவாசலு ரெட்டி புகார் செய்தார்.


ஆனால் ராஜேஷ் ரெட்டி எதுவும் நடக்காதது போல் குடும்பத்துடன் சேர்ந்து மாயமான சிறுமியை தேடிக் கொண்டு இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை.

இந்த நிலையில் சிறுமியை கடத்தியவர்கள் ஸ்ரீவாசலு ரெட்டியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் தந்தால் சகஸ்ராவை விடுவிப்போம் என்று மிரட்டினர்.

செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்திய போலீசார் விஜயவாடாவில் கடத்தல்காரர்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
போலீசார் அதிரடியாக செயல்பட்டு விஜயவாடாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி சகஸ்ராவை மீட்டனர்.

அங்கிருந்த கடத்தல்காரர்கள் சல்மான்,சேக் பஷீரா என்ற பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அண்ணனிடம் பணம் பறிக்க ராஜேஷ் ரெட்டிதான் சகஸ்ராவை தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று சல்மானிடம் ஒப்படைத்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

பணத்துக்காக அண்ணன் மகளை கை கால்களை கட்டி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவரையும் போலீசார் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் சிறுமியை மீட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top