vkrnajur vkrnajur Author
Title: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலை திமுக தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்கிறது. ...
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலை திமுக தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்கிறது.
தமிழக அரசியல் களத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்புதான் முதல் கூட்டணி அறிவிப்பாக இருந்தது.
இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முடிவான நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த 25-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கருணாநிதியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அன்றைய தினம் எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என பேசப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று (திங்கள்கிழமை) சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், "காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் நல்ல முடிவு ஏற்படும்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 54 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 234 தொகுதிகளில் திமுக இதுவரை 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விவசாய தொழிலாளர் கட்சி, சமூக சமத்துவ படை, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top