vkrnajur vkrnajur Author
Title: திமுக அணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ...
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''திமுக தலைவர் கருணாநிதியுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. 

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததை அடுத்து கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. ஸ்டாலின், கனிமொழி முன்னிலையில் கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டேன். இதில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு முடிவாகும்.
திமுக தலைவர் கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வர் ஆவார். இது உறுதி'' என்றார் கிருஷ்ணசாமி.

முன்னதாக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 5, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி ஆகிய வற்றுக்கு தலா ஒன்று என மொத்தம் 54 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top