vkrnajur vkrnajur Author
Title: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: பொடா நீதிமன்றம் தீர்ப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மும்பையில் கடந்த 2002 - 03-ம் ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும் 7 ப...
மும்பையில் கடந்த 2002 - 03-ம் ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

மேலும் 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் கடந்த 2002 டிசம்பர் முதல் 2003 மார்ச் வரை 3 குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. 

இதில் பொதுமக்கள் 12 பேர் பலியாயினர். 139-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சிமி’ (இஸ்லாமிய மாணவர் அமைப்பு) அமைப்பினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்புகள் சம்பந்தப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில், ‘சிமி’ பொதுச் செயலாளர் சாகிப் நச்சான் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் விசாரணையின்போது காலமாகிவிட்டனர். மற்ற 13 பேர் மீதான விசாரணை, தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (பொடா நீதிமன்றம்) நடந்து வந்தது. இதில் போதிய ஆதாரங்கள் இல்லாத தால் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். 

10 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. 

முக்கிய குற்றவாளியான குண்டு வைத்த முசாமில் அன்சாரி, வாகித் அன்சாரி, பர்ஹான் கோட் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிமி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சாகிப் நச்சான், அடீப் முல்லா, ஹாசிப் முல்லா, குலாம் கோட்டால் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நூர் மாலிக், அன்வர் அலி, முகமது கமில் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி பி.ஆர்.தேஷ்முக் கூறும் போது, ‘‘இந்த வழக்கு 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது விசாரணை நீதிமன்றம்தான். கடைசி நீதிமன்றம் அல்ல. இந்த தீர்ப்பு சிலருக்கு அதிருப்தி அளிக்க லாம். எனினும், நீதியை நிலைநாட்ட நான் முயற்சித்திருக்கிறேன்’’ என்றார்.

இதனிடையே குற்றவாளி களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை போதுமானது அல்ல என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக குண்டு வெடிப்பில் இறந்த ராமகாந்த் சால்வி என்பவரின் தம்பி நந்தகி ஷோர் சால்வி கூறும்போது, 

“குண்டுவெடிப்பால் பாதிக்கப் பட்ட யாரையும் இந்தத் தீர்ப்பு திருப்திப்படுத்தவில்லை. இத் தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை அளிப்பது மட்டுமே தேசவிரோத சக்திகளுக்கு விடுக்கும் சரியான எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top