Mohammed Farook Mohammed Farook Author
Title: ஜெயலலிதா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெயில், நெரிசலால் 2 பேர் பலி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக, விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இருவர்  உயிரிழந்தனர். ...
வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக, விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இருவர்  உயிரிழந்தனர். காவலர்கள் உட்பட மேலும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தேர்தல் பரப்புரை செய்தார். சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக வெயிலில் இருந்ததாலும், கூட்ட நெரிசலாலும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்கும் போதே 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில், ராதாகிருஷ்ணன் என்பவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுபோல், சிதம்பரத்தை சேர்ந்த கருணாகரன் டேவிட் என்பவர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜெயமணி, வடக்கு வெள்ளூரை சேர்ந்த லோகநாதன், வில்வபெருந்துறையை சேர்ந்த ராமஜெயம், காடாம்புலியூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன், விருத்தாசலத்தை சேர்ந்த முத்துலட்சுமி, ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த பூங்காவனம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, காவல் பணியில் இருந்த விஜயசாந்தி என்பவர் மீது இருசக்கர வாகனம் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top