vkrnajur vkrnajur Author
Title: 25 ஆண்டுக்கு பின் நிலக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க.–தி.மு.க. நேரடிபோட்டி !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நிலக்கோட்டை தொகுதியில் கடந்த 1957–ம் ஆண்டு முதல் 13 சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. இத்தொகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் வேட்பாளரே அதிக முறை...
நிலக்கோட்டை தொகுதியில் கடந்த 1957–ம் ஆண்டு முதல் 13 சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. இத்தொகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் வேட்பாளரே அதிக முறை வெற்றி பெற்றுள்ளனர். தொடக்கத்தில் சந்திரசேரகன் அதன்பிறகு அப்துல்அஜீஸ் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளார்களாக வெற்றி பெற்றனர். 
1980–ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்ட பொன்னம்மாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை விட 18 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களிலும் பொன்னம்மாளே வெற்றி பெற்றார்.
2001–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. தொகுதியை தன்வசம் ஆக்கியது. அதன்பிறகு 2006–ம் ஆண்டிலும், கடந்த தேர்தலிலும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
கடந்த 1991–ம் ஆண்டு தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முனியாண்டியின் மகன் அறிவழகன் போட்டியிட்டு பொன்னம்மாளிடம் தோற்றார். அதன்பிறகு இத்தொகுதியில் தி.மு.க. போட்டியிடவே இல்லை.
இந்த முறை பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட தலைமையிடம் விருப்ப மனு அளித்திருந்தார். எனவே இந்த முறையும் தி.மு.க.வினர் தங்களுக்கு தொகுதி கிடைக்காது என்று நினைத்தனர். ஆனால் காங்கிரசுக்கு நிலக்கோட்டை ஒதுக்கப்பட வில்லை. இதனையடுத்து புதிய தமிழகம் கட்சிக்கு நிலக்கோட்டை ஒதுக்கப்படும் என நினைத்தனர். ஆனால் நேற்று நடந்த தொகுதி ஒதுக்கீட்டின்போது புதிய தமிழகமும் நிலக்கோட்டையை பெற வில்லை. எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top