காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வருகிறது தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட பிரச்சினை காரணமாக வெற்றிகரமான அணியாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ர...
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட பிரச்சினை காரணமாக வெற்றிகரமான அணியாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இரண்டு ஆண்டுகள் நடைபெற வாய்ப்பில்லை.

அத்துடன் கேலரி பிரச்சினையை காரணம் காட்டி சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் எந்தவொரு ஆட்டமும் சென்னைக்கு ஒதுக்கப்படவில்லை.

பெண்கள் உலக கோப்பை போட்டியில் முக்கியமில்லாத 4 ஆட்டங்கள் மட்டுமே சென்னையில் நடந்தது. எனவே சென்னை ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு பிரிமியர் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டியை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த போட்டி ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரம் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும். ஆட்டங்கள் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள்.

8 அணிகள் தேர்வுக்கான டெண்டர் பணிகள் இந்த மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top