vkrnajur vkrnajur Author
Title: +2 ரிசல்ட் மே 5 வெளியிட்டப்படும்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்...
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் 
துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, 'ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும்.

இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top